Drishyam: ஹாலிவுட் ரசிகர்களையும் விட்டு வைக்காத மலையாள சினிமா... ஆங்கிலத்தில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் த்ரிஷ்யம் படத்தின் இண்டர்நேஷனல் ரைட்ஸை கைப்பற்றியுள்ளது.

Feb 29, 2024 - 18:43
Drishyam: ஹாலிவுட் ரசிகர்களையும் விட்டு வைக்காத மலையாள சினிமா... ஆங்கிலத்தில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் விரைவில் ஆங்கிலத்தில் ரீமேக்காக உள்ளது.

ஒரே மாதத்தில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் என சினிமா ரசிகர்களை கலங்கடித்து வருகிறது மலையாள திரையுலகம். இந்த மூன்று படங்களுமே மலையாளம் மட்டுமின்றி தமிழ் உட்பட மற்ற மொழி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்து வருகின்றன. இதற்கு முன்பு பல மொழி ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட திரைப்படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் இதுவரை இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் மூவியாக வெளியான த்ரிஷ்யம், கடைசி சீன் வரை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக உருவாகியிருந்தது. கதை, திரைக்கதை, மேக்கிங், யூகிக்க ட்விஸ்ட்கள் என ரசிகர்களை சீட்டின் விளிம்பில் உட்கார வைத்திருந்தது. இதனால் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்க கடும் போட்டி காணப்பட்டது. 

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன், கெளதமி நடிக்க, பாபநாசம் என்ற டைட்டிலில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதேபோல், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் த்ரிஷ்யம் ரீமேக்காகி வசூலில் கெத்து காட்டியது. த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் அடித்தன. அனைத்து மொழிகளிலும் இதே வெற்றி சாத்தியமானது தான் குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஹாலிவுட்டிலும் ரீமேக் ஆகிறது.

இதுபற்றிய அப்டேட் அபிஸியலாகவே வெளியாகியுள்ளது.அதாவது பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் த்ரிஷ்யம் படத்தின் இண்டர்நேஷனல் ரைட்ஸை கைப்பற்றியுள்ளது. அதன்படி த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் விரைவில் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யும் வேலைகளை பனோரமா ஸ்டூடியோஸ் தொடங்கிவிட்டதாம். மலையாளம், தமிழ் உட்பட இந்திய மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம், ஆங்கிலத்தில் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow