மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம்: சவரனுக்கு ரூ.1040 உயர்வு 

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம்: சவரனுக்கு ரூ.1040 உயர்வு 
சவரனுக்கு ரூ.1040 உயர்வு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேற்றைய  தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14070 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow