நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு 
தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு சவரன் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. 

நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல். ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை ஆனது. நேற்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரனுக்கு ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow