கடைய எப்ப சார் மூடுவிங்க... அமீரும், ஜாபர் சாதிக்கும் பிசினஸ் பார்ட்னராம்.. நெட்சன்கள் கேள்வி...

Feb 27, 2024 - 21:10
கடைய எப்ப சார் மூடுவிங்க... அமீரும், ஜாபர் சாதிக்கும் பிசினஸ் பார்ட்னராம்.. நெட்சன்கள் கேள்வி...

போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்-கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய இயக்குநர் அமீர், சாதிக்குடன் நடத்தி வரும் உணவகத்தை என்ன செய்யப் போகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டெல்லியில், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்குப் பின்னணியில், திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது விசாரணையில் அம்பலானது. இதனால் அவரைக் கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவானதால், அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநர் அமீர், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதில், தமக்கும் ஜாபர் சாதிக்-கும் வெறும் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற உறவுதான் என்பதுபோல் இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட, அண்மையில் அவர்கள் இருவரும் இணைந்து 2 உணவகங்களை நடத்தி வருவதாக நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 4 Am café & Kitchen மற்றும் The Law Café ஆகிய உணவகங்களை அவர்கள் திறந்துள்ளதையும், அதன் திறப்பு விழாக்களின் வீடியோக்களில் அவற்றைக் குறிப்பிட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி, இவர்கள் இருவரும் தொழில்முறையில் கூட்டாளிகள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், இந்தக் கடைகளை என்ன செய்ய போறீங்க அமீர் சார் என்றும் கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், உணவகத்தை திறந்தீர்களே அதை ஏன் அறிக்கையில் மறைத்து உள்ளீர்கள்? என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடைத்திறப்பு விழா மேடையில் பேசும் போது "வாய்நிறைய நண்பர் ஜாபர்" நண்பர் ஜாபர் என சொன்ன நீங்க, ஏன் திடீர்னு அறிக்கையில் "தயாரிப்பாளர் ஜாபர்" என சொல்லியிருக்கீங்க? சட்டவிரோத செயல்களில் ஈடுப்படும் யாராருடன் இணைந்து பணியாற்ற போவதில்லை என சொல்யுள்ளீர்களே... அதாவது நீங்கள் "இறைவன் மிக பெரியவன்" படத்திலிருந்து விலகிக் கொள்ள உள்ளீர்களா? அப்போ உங்கள் "மாயவலை" படத்தின் தயாரிப்பாளர் "ஜாபர் சாதிக்" ஆச்சே அதை என்ன பண்ண போறீங்க? எனக்கும் - சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் இயக்குனர் உறவு மட்டுமல்ல Business Partners கூட என சொல்ல மறுப்பது, மறைப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow