புதுச்சேரி அரசியல் திடீர் திருப்பம் : நேயம் மக்கள் கழகத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி 

புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனுதாக்கல் நிறைவடைய உள்ளது. நேற்று இரவு புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை தவெக வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேமக-வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. 

Mar 23, 2026 - 13:09
புதுச்சேரி அரசியல் திடீர் திருப்பம் : நேயம் மக்கள் கழகத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி 
நேயம் மக்கள் கழகத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சி, புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக முதலில் அறிவித்திருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்த நிலையில், நேற்று இரவு புதுச்சேரி 30 தொகுதிக்கான தவெக வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார். 

இந்த நிலையில், திடீர் திருப்பமாக த.வெ.க.வுடன் ‘நேயம் மக்கள் கழகம்’ என்ற கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ‘நேயம் மக்கள் கழகம்’ நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் ‘உருளையன்பேட்டை’ மற்றும் ‘தட்டாஞ்சாவடி’ ஆகிய இரண்டு தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow