விஜய்–த்ரிஷா வைரல் ஜோடி... தியான் ஸ்ரீனிவாசனின் பேச்சு இணையத்தில் ட்ரெண்ட்!

விஜய்–த்ரிஷா தொடர்பான வைரல் விவாதங்களுக்கு மத்தியில், நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Jul 17, 2026 - 15:23
விஜய்–த்ரிஷா வைரல் ஜோடி... தியான் ஸ்ரீனிவாசனின் பேச்சு இணையத்தில் ட்ரெண்ட்!

சங்கீதா விஜய்யின் விவாகரத்து நோட்டீஸ்  தொடர்பான செய்தி வெளியான மறுநாளே விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் திருமண விழாவில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படம்  வெளியாகி வைரலாகி வந்தது.

விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே ஆடையில்  வந்தது போல் மலையாள நடிகர் தியான்  ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரை நோக்கில் நகைச்சுவையாகப் பேசியது தற்போது வைரலா பரவி வருகிறது.

நடிகர்  தியான்  ஸ்ரீனிவாசன்  நடித்துள்ள "விசிட்டர்" பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து  கொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாங்கள் (நவ்யா நாயர்) நீண்ட காலத்திற்குப்  பிறகு இப்படி ஒரு படத்திற்காக இணைகிறோம். நவ்யாவுக்கு இப்போது திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். அப்படியிருந்தும் நான் முதலமைச்சராகப் பதவியேற்கும் போது நவ்யா கண்ணீருடன் புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன் என்று பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் விஜய் த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக ஒரே  மாதிரியான ஆடை அணிந்து  திருமண நிகழ்வில் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தியது. இவர்களின் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இரண்டு பேருக்குகென்று  தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதே போல் தற்போது இந்த  இருவரின் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது இந்த வீடியோ ஏன் வைரலாகி வருகிறது என்றால் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றப்போது நடிகை த்ரிஷா  விஜய்யின் பெற்றோர்களான எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும ஷோபாவுடன்  முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.  ஆனால் விஜய்யின் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட போது அவர் உணர்ச்சிவசப்படுவது போன்ற வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெங்கில் ஆனது. இப்போது  விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் வைரலாகி வந்த நிலையில் நடிகர் தியான் கிண்டல் செய்ததாக பேசப்பட்டு வருகிறது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow