சாதாரண தொண்டனாக தொடங்கிய அரசியல் பயணம்... ! விஎஸ் பாபு கடந்து வந்த பாதை...!

திமுகவில் சாதாரண தொண்டனாகத் தொடங்கி ஸ்டாலினின் முரட்டு பக்தராக உயர்ந்து, பின்னர் அவரையே கொளத்தூரில் தோற்கடித்த விஎஸ் பாபுவின் அரசியல் பயணம்.

Nov 19, 2026 - 17:39
Nov 19, 2026 - 17:45
சாதாரண  தொண்டனாக தொடங்கிய  அரசியல் பயணம்... ! விஎஸ் பாபு கடந்து வந்த பாதை...!
VS BABU JOURNEY !

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு உடல் நலக்குறைவால் 75 வது வயதில் காலமானார். தனது அரசியல்  வாழ்க்கையை  திமுகவில் தொடங்கிய விஎஸ் பாபு, திமுக தலைவர், மு.க. ஸ்டாலினின் முரட்டுப்பக்தராக இருந்து, பின்னர் அவரையே கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேற்கடித்தவர். அவர் கடந்து வந்த நீண்ட அரசியல் பாதையை காண்போம்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட விஎஸ் பாபு, 1951ம் ஆண்டு பிறந்தார். இளைமை காலத்தில் கொளத்தூர், அயானவரம், ஐசிஎஃப் பகுதிகிளில் இவரது பயணம் இருந்து வந்தது. சென்னை வில்லிவாக்கம் சிங்காரப்பிள்ளை பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். 

திமுகவில் சாதாரண தொண்டனாக தொடங்கி, படிப்படியாக கட்சியில் உயர்ந்தார். வட சென்னையின் திமுக மாவட்ட செயலாளராகவும் உயர்ந்துள்ளார். 

திமுக இளைஞராணி செயலாளராக முக ஸ்டாலின் இருந்த போது அவரது தீவிர ஆதரவாளராக பணியாற்றி, ஸ்டாலினின் முரட்டு பக்தர்  என்று பெயர் பெற்றவர். 

மு.க.ஸ்டாலின், மேயராக இருந்ததில் தொடங்கி முதல் அமைச்சராக பாணியாற்றியது வரை அவருக்கு ஆதரவாக விஎஸ் பாபு திமுகவில் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.

2006 சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்  பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ ஆனார். 2011 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு புரசைவாக்கம் தொகுதி  கொளத்தூர் தொகுதியாக மாற்றப்பட்ட பின், அந்த தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்டார்.  

அதன் பின்னர் திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக  கட்சியில் இருந்து விலகினார். அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, தனக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு உள்ளிட்ட காரணங்களால், விஎஸ் பாபு திமுகவில் இருந்து விலகியதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  திமுகவில் இருந்த விலகிய விஎஸ் பாபு அதிமுகவில் இணைந்தார். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கிடையே  எடப்பாடி பழனிசாமி தமைமையிலும்  விஎஸ் பாபு செயல்பட்டார். 

அக்கட்சியில் இருந்து விலகிய விஎஸ் பாபு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். பிப்ரவரி தவெகவில்  இணைந்த விஎஸ் பாபு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, அப்போதைய  முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். 

இப்படி, சாதாரண தெண்டனாக அரசியல் வாழ்கையை தெடங்கி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலினின் முரட்டு பக்தனாக இருந்த விஎஸ் பாபு, அவரையே கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்த நிலையில், இன்று  தனது அரசியல் பயணத்துடன் வாழ்கைப்பயணத்தையும்  முடித்து கொண்டு தனது 75 வயதில் காலமானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow