வலியில்லா எதிர்காலத்தை நோக்கி ஒரு புதிய பயணம்!

ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை துல்லியமானது, திசு பாதிப்பைக் குறைத்து வலி இல்லாமல் நோயாளிகள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது.

Aug 20, 2026 - 13:14
வலியில்லா எதிர்காலத்தை நோக்கி ஒரு புதிய பயணம்!
Athulya Geriatric care hospital

அனைத்து முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை அவசியமில்லை. மூட்டு தேய்மானத்தின் நிலையைப் பொறுத்து, பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பொதுவாக, எலும்புகள் ஒன்றோடொன்று உராயும் அளவிற்கு ஏற்படும் Bone-on-Bone Arthritis நிலைக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

இந்நிலையில், சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களில் ஒன்றான ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, மிகத் துல்லியமான முறையில், சுற்றியுள்ள திசுக்களுக்கு குறைந்த பாதிப்புடன், இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்ப உதவும் சிகிச்சை முறையாக உள்ளது.

நோயாளிகள் பொதுவாக கேட்கும் சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்.

ரோபோட் தானாகவே அறுவை சிகிச்சையைச் செய்யுமா?

இல்லை. உங்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரே முழு அறுவை சிகிச்சையையும் கட்டுப்படுத்துகிறார். ரோபோடிக் கருவி ஒரு புத்திசாலித்தனமான உதவியாளராகச் செயல்படுகிறது. உங்கள் முழங்காலுக்காக உருவாக்கப்படும் பிரத்யேக 3ஞி வரைபடத்தின் உதவியுடன், பொருத்தப்படும் இம்ப்ளான்ட்டின் அளவு மற்றும் நிலையை ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் வழிநடத்துகிறது.

குணமடையும் காலத்தில் வலி எவ்வளவு இருக்கும்?

ரோபோடிக் கருவி சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்கள், தசைகள் மற்றும் தசைநார்களை முடிந்தவரை பாதுகாக்க உதவுவதால், திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைகிறது. இதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி குறைவதுடன், தழும்பும் குறைவாக இருக்கும். இவை அனைத்தும் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்ப உதவுகின்றன.

எப்போது மீண்டும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்?

பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் உதவியுடன் நின்று நடக்க முடியும். பொதுவாக, 3 முதல் 6 வாரங்களுக்குள் அன்றாட செயல்பாடுகள் மற்றும் லேசான பணிகளுக்குத் திரும்ப முடியும்.

இம்ப்ளான்ட் இயல்பான முழங்காலைப் போல உணருமா?

ஆம். மிகத் துல்லியமான சீரமைப்பு மற்றும் Kinematic Alignment அணுகுமுறையின் மூலம், முழங்கால் இயல்பான இயக்கத்தையும் உணர்வையும் பெற உதவுகிறது. மேலும், சரியான முறையில் பொருத்தப்படும் இம்ப்ளான்ட் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கும் வாய்ப்பள்ளது.

மருத்துவர் பாரதி ராஜா 
அதுல்யா முதியோர் பராமரிப்பு மருத்துவமனை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow