கில்லாடி லேடி.. கராத்தேயில் விருதுகளை குவிக்கும் சுப்ரியா ஜாதவ்!
சக்தி தூட், மேஜர் தயாசந்த் போன்ற உயரிய விருதுகளை வென்று அசத்தியுள்ள கராத்தே வீராங்கனை சுப்ரியா ஜாதவின் வெற்றிக் கதையினை இப்பகுதியில் காணலாம்.

காமன்வெல்த் குமிட் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில்' தொடர்ச்சியாகப் பங்கெடுத்து, மூன்று பதக்கங்களை வென்றவர், சுப்ரியா ஜாதவ். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற US கராத்தே ஓப்பன் போட்டிகனில் தங்கம் வென்றுவந்த இந்தத் "தங்க மங்கை'யை நாடே வாழ்த்துகிறது!
மத்தியபிரதேச அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் பிரதிநிதியாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். குஜராத் மாநிலம் 'டாஹோட்' பகுதியில் 1991-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி பிறந்தவர், சுப்ரியா ஜாதவ். தந்தை அவர் இங் ஜாதவ் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, தாயர் மீனா ஜாதவ், இல்லத்தரசி.
ஜெய்தேவ் ஷர்மா என்பவரிடம் கராத்தே பயிற்சி பெற்றவர், சுப்ரியா . 2019-ம் ஆண்டு 'ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி’களின் ’எலைட் பிரிவில்’ வென்ற ஒரே இந்தியர் இவர்தான், 2010 முதல் 2020 வரை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வென்றுள்ளார்.
தந்தையும் தாயும் தமக்கு எல்லையற்ற ஊக்கம் அளித்ததாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். சுப்ரியா. அதேசமயம் எல்லா அம்மாக்களைப் போலவே, இவருடைய அம்மாவும் மகளின் உடல்நலத்தைப் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்.
காரணம், இவர் தேர்ந்தெடுத்திருக்கும் துறையானது உடலுக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்களை உள்ளடக்கியது. அதுமட்டுமல்லாமல்; திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய பெண்ணுக்கு சவால்கள் நிரம்பிய துறையாக கராத்தே இருந்ததால் இவருடைய தாயர் கவலைப்பட்டிருப்பதும் நியாயமே!
இந்தத் துறையின் சவாலான அம்சங்களில் ஒன்று தற்காப்புக் கலைகளில் ஈடுபடும்போது உடலுக்கு ஏற்படும் சில காயங்கள் வாழ்நாள் முழுக்கத் தொடரும் என்பதுதான். அதனால், இந்தத் துறையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போவதோடு, தனிப்பட்ட வாழ்க்கையையும் அது பாதிக்கக்கூடும். ஆனால், அவற்றையெல்லாம் துணிச்சலோடு பாதுகாப்போடு எதிர்கொண்டால் சாதனைகள் நிகழ்த்துவது எளிது என்று சொல்லும் சுப்ரியா, ஒருமுறை காலில் ஏற்பட்ட காயத்திற்காக தையல் போட்டிருந்த நிலையில், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்!
தனது முதல் வெற்றிக்குப் பிறகு சுப்ரியா எப்படி உணர்ந்தாராம்?
'ஒரு பதக்கம் அல்லது போட்டியை வென்ற பிறகு ஒருவர் சாம்பியனாக முடியாது என்பதில் என்னுடைய பயிற்சியாளர் உறுதியாக இருந்தார். எனவே. எனது முதல் தேசியப் பழக்கம் ஒரு சாதனை என்பதைவிட எனக்குக் கூடுதல் பொறுப்பை அளித்தது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச சாம்பியன்ஷிப்பை வெல்வதன் மூலமாக நானொரு போராளி என்பதை திருகிக்கும் பொறுப்பு அது" என்கிறார்.
விளையாட்டுகளுக்கென குஜராத் மற்றும் மத்தியபிரதேச அரசுகள் வழங்கக்கூடிய கீழ்க்காணும் உயரிய விருதுகளையும் சுப்ரியா பெற்றிருக்கிறார். 2011-ம் ஆண்டில் குஜராத் அரசு வழங்கிய சக்தி தூட் விருது. 2012-ம் ஆண்டு மேஜர் தயாசந்த் விருது. 2014-மத்தியபிரதேச அரசு வழங்கிய 'விக்ரம் விருது. 2016-ல் ஸ்போர்ட்ஸ் டைம்ஸ் விருது, தவிர, ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இவர் குவித்திருக்கும் வெற்றிகள் மற்றும் விருதுகளின் பட்டியல் மிகவும் நீளமானது!
நமது உடல்நிலையைக் கச்சிதமாகப் பேணுவதற்காகப் பலவிதமான டயட் முறைகளையும் கையாண்டு பார்த்திருக்கிறார். சுப்ரியா ஜாதவ் ’Balanced Diet’ எனப்படும் சரிவிகித உணவு முறையைத்தான் இவர் பின்பற்றுகிறார். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். ”என் உடலுக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து மற்றும் இதர நுண் ஊட்டச்சத்துகள் உள்ளிட்டவற்றில் தேவையை என் உடலே எனக்கு உணர்த்தும். அதைக் கூர்ந்து கவனித்து பின்பற்றுவது என்னுடைய வழக்கம்' என்கிறார்.
காலை மாலை என இரு வேளையும்: தலா 2 மணிநேரம் என நாளொன்றுக்கு 4 மணி நேரம் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஸ்ட்ரெச்சஸ், மொபிலிடி, ட்ரில்ஸ், எஜிலிடி, ட்ரீஸ் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
தற்காப்புத் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கு சுப்ரியா சொல்லும் ஆலோசனைகள் என்ன?
என்ன தடைகள் வந்தாலும், உங்களின் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். இந்தியாவில் பெண்கள் பலரும் விளையாட்டைத் தங்கள் தொழிலாகத் தொடரவேண்டும் என்று கனவுகூடக் காண முடியாத சூழல் நிலவுகிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இரண்டாவது, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தற்காப்பும் கலையைக் சுற்றுக்கொள்வது மிகவும் அவசியம். கெண்டைக்கால், முழங்கால் மூட்டுகள் ஆகியவற்றுக்கான பாதுகாப்புக் கவசங்கள் அணிவது மிகவும் முக்கியம். காற்றோட்ட வசதியுடனும் எளிதில் தூய்மை செய்யக்கூடிய வகையிலும் அவை இருத்தல் வேண்டும்.
(கட்டுரையாளர்: லதானந்த் / குமுதம் சிநேகிதி இதழ் / 21.08.2025)
What's Your Reaction?






