என்ன MARVEL FANS ரெடியா ! அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் !

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படம் தொடர்பாக இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nov 17, 2026 - 13:50
என்ன MARVEL FANS ரெடியா ! அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் !
AVENGERS DOOMSDAY ONLINE BOOKING !

மார்வெல் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், முன்பதிவு குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக 'அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே' உருவாகியுள்ளது. குறிப்பாக, 'அவென்ஜர்ஸ்: இன்பினிட்டி வார்', 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளனர். இதனால் படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

டாக்டர் விக்டர் வான் டூமாக ராபர்ட் டவுனி ஜூனியர்!

இப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரின் கதாபாத்திரம்தான். இதுவரை அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது 'டாக்டர் டூம்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிறிஸ் எவன்ஸ், ஷூரி, ஜேம்ஸ் மார்ஸ்டன், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எண்ட்கேம் படத்துடன் தொடர்பு!

2019-ம் ஆண்டு வெளியான 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. மார்வெல் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்த இப்படத்திற்குப் பிறகு, அவென்ஜர்ஸ் கதையின் அடுத்த முக்கியமான அத்தியாயமாக 'டூம்ஸ்டே' பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் என்கோர்' என்ற பெயரில் சிறப்புத் திரையிடலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது.

ஏனென்றால், 2019 - ம் ஆண்டு வெளியான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் தொடர்ச்சியாக டூம்ஸ்டே படம் பார்க்கப்படுவதால் மார்வெல் உலகத்துடன் டூம்ஸ்டேவுடன் தொடர்புபடுத்த எண்ட்கேம் படத்தில் லீட் காட்சிகளுடன் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் என்கோர் என்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் டூம்ஸ்டே படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்தியாவில் டிசம்பர் 17-ம் தேதி வெளியீடு!

உலகம் முழுவதும் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படம், இந்தியாவில் ஒருநாள் முன்னதாக டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் படத்தின் தமிழ் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு!

இந்நிலையில், இந்தியாவில் 'அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இன்ஃபினிட்டி விஷன் சான்றளிக்கப்பட்ட திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மல்டிபிளக்ஸ், 2D மற்றும் 3D திரையரங்குகளுக்கான முன்பதிவுகளும் படிப்படியாகத் தொடங்குகின்றன.

முன்பதிவு தொடங்கிய அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கெனவே எண்ட்கேம் திரைப்படம் ஏற்படுத்திய வரவேற்பு, ராபர்ட் டவுனி ஜூனியரின் டாக்டர் டூம் கதாபாத்திரம் எனப் பல அம்சங்கள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இதனால், படம் திரைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவில் மிகப்பெரிய வசூலைக் குவிக்குமா? வெளியான பிறகு எண்ட்கேம் படத்தின் வசூல் சாதனைகளை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு மார்வெல் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow