குக் வித் மாதம்பட்டி ரங்கராஜ்: எள்ளு சாதம் இப்படி செய்து பாருங்க!

மாதம்பட்டி ரங்கராஜ் குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் தொடர்ச்சியாக நளபாக நாயகன் என்கிற தொடரில் சமையல் குறிப்புடன், நேர்க்காணலையும் வழங்கி வருகிறார்.

Apr 5, 2025 - 15:55
குக் வித் மாதம்பட்டி ரங்கராஜ்: எள்ளு சாதம் இப்படி செய்து பாருங்க!
madhampatty rangaraj

இந்த வாரம் வெளியான சிநேகிதி இதழில் எள்ளு சாதம் தயாரிப்பது எப்படி? என விளக்கியுள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு-

தேவையானவை: வடித்த சாதம் 1 கப், எள்ளுப்பொடி - 3 ஸ்பூன், உப்பு 1/4 டீஸ்பூன், நெய்-1 டீஸ்பூன். 

எள்ளுப்பொடி செய்ய: கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, மிளகு - 1 டீஸ்பூன், புளி - சிறிதளவு, கொப்பரைத் தேங்காய் 1 டேபிள் ஸ்பூன், கருப்பு எள் - 3 டேபிள் ஸ்பூன், கல் உப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன். 

தாளிக்க: எண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2 துளிர், முந்திரிப்பருப்பு தேவைக்கு.

செய்முறை:

கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, புளி, கொப்பரைத் தேங்காய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நன்றாக வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும், எள்ளைச் சேர்த்து வறுக்கவும். இறுதியில், அடுப்பை அணைத்தவுடன், கல் உப்பு, பெருங்காயம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஆறியதும் அரைத்து எடுத்தால், 'எள்ளுப்பொடி தயார்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து, சாதம் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கிளறவும். பின்னர், எள்ளுப்பொடியைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். சாதத்திற்குத் தேவையான உப்பு மற்றும் நெய் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கினால், பாரம்பரியமான 'எள்ளுப்பொடி சாதம்' தயார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow