COOKU WITH COMALI அஸ்வினுக்கு டும் டும் டும்..பிரபல இயக்குநரின் பேத்தியை கரம் பிடித்தார்...டிரெங்கில் திருமண வீடியோ!

குத் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின், தனது நீண்ட நாள் காதலியான புவனேஸ்வரியை கரம் பிடித்துள்ள நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Nov 20, 2026 - 14:02
COOKU WITH COMALI அஸ்வினுக்கு டும் டும் டும்..பிரபல இயக்குநரின் பேத்தியை கரம் பிடித்தார்...டிரெங்கில் திருமண வீடியோ!
Ashwin marriage

குக் வித் கோமாளி மூலம் கிடைத்த புகழ்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருடைய ஸ்டைல், சமையல் செய்யும் விதம், கோமாளிகளுடன் அவர் செய்யும் கலாட்டா, சிவாங்கியுடன் அவர் பேசும் விதம் என அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திய அஸ்வின், 'ஓ காதல் கண்மணி', 'ஆதித்ய வர்மா', 'செம்பி', 'ஹாட்ஸ்பாட் 2 மச்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'செம்பி' திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. இதுதவிர 'இரட்டைவால் குருவி', 'நினைக்கத் தெரிந்த மனமே' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

காதலிக்கு கரம் பிடித்த அஸ்வின்!

கோவையைச் சேர்ந்த அஸ்வின், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். படிப்படியாகத் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்று தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தான் காதலித்து வந்த புவனேஸ்வரியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். கோவையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் இருவீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

பிரபல இயக்குநரின் பேத்தி!

அஸ்வின் திருமணம் செய்துகொண்ட புவனேஸ்வரியும் திரைத்துறையுடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா மறைந்த பிரபல இயக்குநர் ராஜசேகர் ஆவார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'தம்பிக்கு எந்த ஊரு', 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை', 'மாவீரன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ராஜசேகர். மேலும், கமல்ஹாசன் நடித்த 'காக்கிச்சட்டை' திரைப்படத்திலும் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இத்தகைய பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரியை அஸ்வின் காதலித்து திருமணம் செய்துகொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

வைரலாகும் திருமண வீடியோ... குவியும் வாழ்த்துகள்!

அஸ்வினின் திருமணச் செய்தி நேற்று மாலைதான் பலருக்கும் தெரியவந்தது. இதுவரை திருமணம் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்த நிலையில், தற்போது அவர் தனது மனைவி புவனேஸ்வரிக்கு தாலி கட்டும் வீடியோவும், திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள், அஸ்வின் - புவனேஸ்வரி தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow