சட்டமன்ற தேர்தல் தபால் வாக்குகள் : திமுக முன்னிலை, திருச்சி கிழக்கு விஜய் பின்னடைவு 

சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டது. அதில் ஆரம்ப முதலே ஆளும்  திமுக முன்னிலை பெற்றுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகளில் விஜய் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தபால் வாக்குகள் : திமுக முன்னிலை, திருச்சி கிழக்கு விஜய் பின்னடைவு 
தபால் வாக்குகள் : திமுக முன்னிலை

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்குள்ள ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றது. காலை 8.30 நிலவரப்படி திமுக 53 தொகுதிகளிலும், அதிமுக 21, தவெக 9 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow