RECORD BREAKER இல்லடா RECORD MAKER! SOUTH INDIA-வில் RECORD படைத்த தலைவர் !
இதுவரை எந்தவொரு நடிகரும் செய்திராத சாதனையை செய்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்னதான் கோலிவுட் தவிர்த்து அணைத்து இண்டஸ்ட்ரியிலும் 1000 கோடி வசூல் அடித்திருந்தாலும் தென்னிந்தியாவை கவரமுடியாத பல பான் இந்தியா நடிகர்கள் தவிக்கும் நேரத்தில், தலைவர் AU'RAJNIKANTH செய்திருக்கும் சாதனை சமூக வலைத்தளத்தை வைரலாகியுள்ளது!...
அன்றும், இன்றும், என்றும் தலைவர் நிரந்தரம்! 4 மாநிலங்களில் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் கடந்த முதல் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் இப்படம், ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
4 மாநிலங்களில் 80 கோடியை கடந்த தலைவர்!
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த முதல் ஹீரோ என்ற சாதனையை ரஜினிகாந்த் படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை தனது திரையுலக ஆதிக்கத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ள தலைவர், ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வசூல் பலத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கர்நாடகாவில் ரூ.93 கோடி வசூல்!
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு கர்நாடக ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகாவில் மட்டும் சுமார் ரூ.93 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் இருக்கும் மாநிலத்திலும் ரஜினியின் மாஸ் குறையவில்லை என்பதை இந்த வசூல் வெளிப்படுத்துகிறது.
கேரளாவில் ரூ.80 கோடி வசூல்!
மலையாள ரசிகர்களிடமும் ரஜினிக்கு தனி மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் 'ஜெயிலர் 2' திரைப்படம் கேரளாவில் சுமார் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் ரஜினியின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அவரது தென்னிந்திய ரசிகர் பட்டாளத்தின் பலத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
ஆந்திரா - தெலங்கானாவில் ரூ.100 கோடி!
தெலுங்கு ரசிகர்களின் ஆதரவையும் 'ஜெயிலர் 2' திரைப்படம் முழுமையாக பெற்றுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜுனே ரஜினியின் நடிப்பையும் வசூல் சாதனையையும் பாராட்டியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வட இந்தியாவிலும் ரஜினியின் மவுசு!
தமிழ் மற்றும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி வட இந்திய ரசிகர்களையும் ரஜினிகாந்த் கவர்ந்துள்ளார். வட இந்தியாவில் 'ஜெயிலர் 2' திரைப்படம் சுமார் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினியின் ஸ்டார் பவர் இந்திய அளவில் தொடர்ந்து வலுவாக இருப்பது தெரிய வருகிறது.
வெளிநாடுகளில் ரூ.273 கோடி வசூல்!
வெளிநாடுகளில் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் சுமார் ரூ.273 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு வசூலிலும் ரஜினியின் ஆதிக்கம் தொடர்வது அவரது உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ரூ.200 கோடி வசூல்!
தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் ரசிகர் பட்டாளம் எவ்வளவு பெரியது என்பதை 'ஜெயிலர் 2' வசூல் மீண்டும் நிரூபித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், வசூல் சாதனைகளிலும் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது.
"சட்டை கூட கலையாமல் 500 கோடி!" - அல்லு அர்ஜுன் பாராட்டு!
'ஜெயிலர் 2' திரைப்படத்தை பார்த்த தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜுன், தனது எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்தின் ஸ்டார் பவரை பாராட்டியிருந்தார்.
"சட்டை கூட கலையாமல் 500 கோடிக்கு மேல் வசூல் அடிப்பது ரஜினி சாருக்கு மட்டுமே சாத்தியம்!" என்ற அவரது பாராட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இத்தனைக்கும், 1000 கோடி வசூல் கொடுத்துள்ள பான் இந்தியன் நடிகர் அல்லு அர்ஜுனின் இந்த பதிவு, ரஜினிகாந்த் Record Breaker இல்லடா Record Maker என்று நிரூபித்து காட்டியிருக்கிறார்.
அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்!
நீ உன் ஸ்டேட்ல வேணும்னா சூப்பர்ஸ்டாரா இருக்கலாம், ஆனா தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம் மற்றும் கர்நாடக என நாலு ஸ்டேட்லயும் நான்தான் ஒரே சூப்பர்ஸ்டார் என்று ஸ்டைலாக நடந்துவரும் காட்சிகள் மூலமாகவே மீண்டும் நிரூபித்துகிறார் தலைவர்.
'ஜெயிலர் 2' படத்தின் வசூல் சாதனைகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரூ.1,000 கோடி வசூல் இலக்கை தலைவர் எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், வசூல் சாதனைகளுக்கும் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கும் இடையே மீண்டும் ஒருமுறை தனது ஸ்டார் பவரை நிரூபித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அன்றும், இன்றும், என்றும் தலைவர் நிரந்தரம்!
What's Your Reaction?



