ஸ்பெயின் vs பெல்ஜியம்: உலகக் கோப்பையில் அனல் பறக்கும் மோதல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
உலகக் கோப்பை காலிறுதியில் இரவு 12.30 மணிக்கு நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இதுவரை தோல்வியே சந்திக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றிலே ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் இரு அணிகள் இதற்கு முன்னரே இரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
1986 உலக்க் கோப்பையில் பெனால்டி சூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றன.அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இது வரை இரு அணிகளும் 22 முறை மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் 12 வெற்றியும் பெல்ஜியம் 5 வெற்றியும் பெற்றுள்ளது. மேலும் 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இது வரை 5 போட்டிகளிலும் எதிரணிக்கு ஒரு கோல் கூடி அடிக்க வாய்ப்பு அளிக்காமல் அபாரமாக செயல்பட்டுள்ளது. குரூப் சுற்றில் சவுதி அரேபியாவை 4-0 உருகுவேயை 1-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் கேப் வெர்டேவுடன் 0-0 என டிரா செய்த்து. அதனைத் தொடர்ந்து ரவுண்ட் ஆப் 32 ல் ஆஸ்திரியாவை 3-0 எனவும் ரவுண்ட் ஆப் 16 ல் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
18 வயதாக இளம் நட்சத்திரம் லமின் யமால் மீது இந்த போட்டியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ள அவர் பெல்ஜியத்தின் வலுவான தடுப்பாட்டத்தை உடைத்து தனது முத்திரையை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. மறுபுறம் பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் தோல்வியின்றி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 2 டிரா பெற்றுள்ளது. குரூப் சுற்றில் நியூசிலாந்தை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் ஈரானுடன் 0-0 மற்றும் எகிப்துடன் 1-1 என டிரா செய்தது.
ரவுண்ட் 32 ல் செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்திய அந்த அணி ரவுண்ட் ஆப் 16 ல் தொடரை நடத்து அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேருக்கு நேர் மோதலில் உள்ள புள்ளி விவரங்களை பார்த்தால் ஸ்பெயின் அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் பெல்ஜியத்தின் அதிரடி தாக்குதல் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டது.
இதனால் நள்ளிரவு நடைபெறும் இந்த காலிறுதி ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?

