கீர்த்தி சுரேஷின் அதிரடி வாதம்... சபாஷ் சாவித்திரி!

வக்கீலாக சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், கணவரைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற மீண்டும் நீதிமன்றத்தில் களமிறங்குகிறார். எதிர்தரப்பு வக்கீலாக மிஷ்கின் மோத, காமெடி, காதல், சென்டிமென்ட், எதிர்பாராத திருப்பம் என விறுவிறுப்பாக நகர்கிறது.

Nov 22, 2026 - 22:15
கீர்த்தி சுரேஷின் அதிரடி வாதம்... சபாஷ் சாவித்திரி!

விமர்சனம், சத்தியவான் சாவித்திரி   

படித்த கிராமத்து பெண் கீர்த்தி சுரேஷ், தன் லாயர் கனவை நிறைவேற்ற அப்பா, அம்மா சொன்ன மாப்பிள்ளையை கண்டிஷன் போட்டு கல்யாணம் பண்ணிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். திட்டமிட்டபடி பிரபல கிரிமினல் லாயர் மிஷ்கினிடம் உதவியாளராக சேர்ந்து, முதல் கேசிலேயே பாதியில் அவருக்கு எதிரியாக மாறி அவரை தோற்கடிக்கிறார். 

அந்த சமயத்தில் அவருக்கு அபார்ஷன் ஆக, இனி வக்கீல் தொழிலே வேண்டாம் என்று முடிவு செய்த நேரத்தில், அவரது கணவர் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். அவரை காப்பாற்ற மறுபடியும் கருப்பு கவுனை போட, எதிரியாக வந்து எகிறி அடிக்கிறார் எதிர்தரப்பு வக்கீல் மிஷ்கின். இருவருக்கும் நடக்கும் அந்த மோதலில் யார் ஜெயிக்கிறார் என்பது உச்சகட்டம்... ஆனால் முடிவு மட்டும் யாருமே எதிர்பார்க்காத ஒன்று...

கீர்த்தி சுரேஷ் காமெடி, ரொமான்ஸ், சோகம், சூழ்ச்சி என விதவிதமான உணர்வுகளில் ஒவ்வொரு பிரேமிலும் பின்னி பெடலெடுக்கிறார். மிடுக்கான லாயராக மிஷ்கினும் மிரட்டுகிறார். பால சரவணன் காமெடி கலகல... சாருகேஷ், தீபா சங்கர், ஷில்பா மஞ்சுநாத், ஏ.வெங்கடேஷ், மதுசூதன ராவ், பிரிகிடா சாகா என பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. 

சாம் சி எஸ்.சின் இசை இதம். ஒளிப்பதிவு எடிட்டிங், சிறப்பு. கீர்த்தி சுரேஷ் உடனடி கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்வதும், ஒரு டிவிஸ்ட்டுக்காக அவரது கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக சொல்வதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.  கோர்ட் சீன்கள் ஓவர் டிராமா.

சத்தியவான் சாவித்திரி - சபாஷ் சாவித்திரி

3 ஸ்டார் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow