இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் ? வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sep 14, 2026 - 10:15
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் ? வானிலை மையம் தகவல் !
Tamil Nadu Weather Update

தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 14) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மன்னார் வளைகுடா வரை நீளும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) உருவாகியுள்ளது. இது மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழ்நாடு பகுதிகள் வழியாக நிலவுகிறது.

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

இன்று (14-09-2026) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு :

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

ஏனைய பகுதிகளில் லேசான மழை :

ஏனைய தமிழ்நாடு பகுதிகளில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

இன்று முதல் செப்டம்பர் 17 வரை, வட தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. எனினும், வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

தென் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.

உள் தமிழ்நாட்டில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகலாம். கடலோர தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (14-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow