நகை வாங்குவோருக்கு ஷாக்....அதிகரித்து வரும் தங்கம் விலை....எவ்வளவு தெரியுமா?
இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, நேற்று (27.10.2026) அதிரடியாக உயர்ந்தது காணப்பட்டது. அதன்படி, சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,20,000 விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?



