கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 26, 2026 - 10:14
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
Gold RateToday

கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, வார இறுதியில் சற்று உயர்ந்த நிலையில், வார தொடக்கமான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம்(24.10.2026) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80-ம், கிராமுக்கு ரூ.10-ம் உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow