“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” : ஓரே நாளில் சவரன் ரூ 5,200 உயர்வு 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.2400 உயர்ந்த நிலையில், மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” : ஓரே நாளில் சவரன் ரூ 5,200 உயர்வு 
ஓரே நாளில் சவரன் ரூ 5,200 உயர்வு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.தற்போது ஈரோன் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர்பதற்றம் உருவாகி உள்ளது.  

நேற்றைய தினம்  தங்கம் விலை சற்றே குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900 விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

வாரத்தின் கடைசி நாளான இன்று காலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300 விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ3,00,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,550 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

இதே போன்று, வெள்ளியும் மாலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow