பெரும் குழப்பத்தில் பெண்கள்...தங்கம் விலை மீண்டும் சரிவு!
தங்கம் விலை மீண்டும் தடுமாறுவதால் “இப்போ வாங்கலாமா, இன்னும் காத்திருக்கலாமா?” என நகை வாங்குவோர் குழப்பம்!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. காலையில் விலை உயருமா? குறையுமா? என எதிர்பார்த்துக் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு, இன்றைய விலை சரிவு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, ஆகஸ்ட் 27 - ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை குறைந்தது. அன்று காலை சவரனுக்கு "ரூ.560 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு "ரூ.1,720 குறைந்தது". இதனால் அன்றைய தினம் மாலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,800-க்கு" விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலையிலும் தங்கம் விலை குறைந்தது. நேற்று காலை சவரனுக்கு ரூ.600-ம், கிராமுக்கு "ரூ.75-ம் குறைந்ததால், ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650-க்கும்" விற்பனை செய்யப்பட்டது.
மாலையில் திடீர் உயர்வு:
இந்நிலையில், திடீரென்று நேற்று மாலை தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு "ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1,18,400-க்கு" விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.150 உயர்ந்து ரூ.14,800-க்கு" விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரே நாளில் காலையில் குறைந்து, மாலையில் மீண்டும் உயர்ந்துள்ள தங்கம் விலை நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நேற்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்ற, இறக்கங்கள் நகை வாங்கும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இன்றைய தினம்(ஆகஸ்ட் 29) தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் குறைந்துள்ளது.
இன்று தங்கம் விலை எவ்வளவு?
இன்றைய சந்தை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு "ரூ.2,360 குறைந்துள்ளது".
இதனால் நேற்று இருந்த விலையிலிருந்து குறைந்து, இன்று "ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,040-க்கு" விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்துள்ளது. இதனால் இன்று "ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.14,505-க்கு" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் சரிவு:
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளி விலை "கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது". இதனால் "ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.260 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் குறைந்துள்ளதால், விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், நகை வாங்குவோரின் அடுத்த எதிர்பார்ப்பு — “நாளைக்கு தங்கம் விலை ஏறுமா... இறங்குமா?” என்பதுதான்!
What's Your Reaction?

