கொளத்தூரில் களமிறங்கும் ஸ்டாலின்?...ஆட்டத்தை தொடங்க காத்திருக்கும் திமுக!

தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவால் கொளத்தூர் தொகுதி காலியாக உள்ள நிலையில், இந்தத் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைக் களமிறக்க அறிவாலய வட்டாரங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Nov 23, 2026 - 12:37
கொளத்தூரில் களமிறங்கும் ஸ்டாலின்?...ஆட்டத்தை தொடங்க காத்திருக்கும் திமுக!

தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவால் கொளத்தூர் தொகுதி காலியாக உள்ள நிலையில், இந்தத் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைக் களமிறக்க அறிவாலய வட்டாரங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவை தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.   

இந்த தொகுதியும் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த தேர்தலில்  கொளத்தூர் தொகுதியில் அப்போதைய  முதலமைச்சர் முக ஸ்டாலின் தோல்வியை தழுவியது, அக்கட்சியின் 

மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர் மனங்களில் தழும்பாக பதிந்து விட்டது. 

மேலும் சட்டப்பேரவையில்  அப்பாவை காணோம் என்று முதலமைச்சர் விஜய் பேசியதும் திமுகவினரை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. 

எனவே தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவால் காலியாக உள்ள காலியாக உள்ள கொளத்தூர் தொகுதியை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும்  என்று திமுகவினர் எண்ணுகின்றனர். 

ஆனால் வேட்பாளர்கள் தேர்வில் திமுவினர் மத்தியில் வேட்பாளர் தேர்வில் குழப்பமான  மனோ நிலையே இருப்பதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக சீனியர், ஜுனியர்  இடையே இரு வேறு கருத்துகள் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

சட்டப்பேரவையில், அப்பாவை  காணோம் என, முக. ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு  முதலமைச்சர் விஜய் பேசியதால் கொந்தளித்துள்ள சீனியர்கள்,  முக ஸ்டாலினை கொளத்தூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களாம்.. 

ஆனால், முக ஸ்டாலின், முதலமைச்சராகதான் செல்ல வேண்டும் என்றும் என்று சில சீனியர்கள் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில் திமுகவில் உள்ள இளசுகளின்  மனோநிலை வேறுவிதமாக உள்ளதாம்..

 இனி அரசியல் களம் முதலமைச்சர் விஜய்,  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி,  என மாறிவிட்டதாகவும்  இதில் முக ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சியாக வந்தால் அது சரியாக இருக்காது என்றே கருத்தே  அவர்கள் மத்தியில் நிலவுவதாக கூறப்படுகிறது.  

இது ஒருபுறம் இருக்க, அண்மைக்காலமாக, மேயர் பிரியா,  தவெகவினர் பேச்சிக்கு பதிலடி கொடுத்து வருவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக நினைக்கும் திமுகவில் உள்ள சில சீனியர் அவரை களமிறக்கினால்,  நன்றாக   இருக்கும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்களாம்.  

எப்படி இருந்தாலும், கொளத்தூர் தொகுதில் திமுகவினர் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். சில இடங்களில்  தேர்தல் விளம்பரத்திற்காக சுண்ணாம்பு அடித்து கட்சி நிர்வாகளின் பெயர்களை எழுது பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

இது  ஒருபுறம்  இருக்க கொளத்தூர் தொகுதியை எப்படியாவது,  தக்க வைத்து கொள்ள ஆளும் தவெக  முனைப்புக்காட்டி வருகிறது. 

ஏனென்றால்  அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற விட்டால் அது மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தும் என்று தவெக தலைமை கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியை கேட்டுப் பெற வேண்டும் என்ற போட்டியும் தவெகவில் கடுமையாக நிலவுகிறாம்.

இதில் முதலமைச்சர் விஜய்க்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்த சிவா, சீட் பெற கடுமையாக முயற்சித்து வருகிறாராம்.  அதேவேளையில் எப்படியாவது   கொளத்தூர் தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்று , கொளத்தூர் பகுதி தவெக நிர்வாகி  தணிகாவும் காய் நகர்த்தி வருகிறாராம். 

இப்படி இருக்க கொளத்தூர் தொகுதி தவெக-திமுக ஆகிய கட்சிகளில் இருமுனை போட்டிக்  களமாக  மாறி விட்டது இப்போதே உறுதியாகி விட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow