வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை இந்த வார பலன்கள்!

தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம், பயணம், முதலீடு மற்றும் வழிபாட்டு பலன்கள் குறித்து ஒவ்வொரு ராசிக்கும் விரிவான முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாரம் உங்களுக்கு என்ன பலன் காத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Jul 1, 2026 - 06:00
Jun 29, 2026 - 15:13
வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை இந்த வார பலன்கள்!

மேஷம்

மேன்மைகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். பிறரால் ஏற்றிருந்த பழி மாறும். குடும்பத்தில் குதூகலச் சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு நிலையான முன்னேற்றம் உருவாகும். கலை, படைப்புத் துறையினருக்கு அந்தஸ்து உயரும். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். கவனியுங்கள். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
ரிஷபம்

சிந்தித்துச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. திட்டமிட்டுச் செயல்பட்டால், உங்கள் திறமை பேசப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வார்த்தையில் இனிமை இருந்தால் அது நிலைக்கும். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். அரசு, அரசியல்துறை யினருக்கு பெருமை, புகழ் சேரும். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு அரசுவழி பாராட்டு கிட்டும். தோள்பட்டை, கழுத்து முதுத் தண்டுவட உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.

மிதுனம்

நிதானமாக இருக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாது. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்றிடுங்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். வாழ்க்கைத் துணை வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் சீரான லாபம் வரும். சட்டப்புறம்பின் நிழல்கூட படாமல் கவனமாக இருங்கள். அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினர் ரகசியம் காத்திடுங்கள். இரவுப்பயணம் தவிருங்கள். கழிவுறுப்பு, முதுகு, மூட்டு, நரம்பு உபாதை வரலாம். ஏழுமலையான் வழிபாடு ஏற்றம் தரும்.

கடகம்

சிரமங்கள் குறைந்து சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணி யிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடிவரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாரிசுகளிடம் வீண் கடுமை தவிருங்கள். பிறமொழி மனிதர்களிடம் நெருக்கம் தவிருங்கள். குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல் துறையினருக்கு பலகாலக் கனவுகள் நனவாகத் தொடங்கும். கலை, படைப்புத் துறையினருக்கு அரசுவழி கௌரவம் கிடைக்கும். பயணத்தில் வேகம் தவிருங்கள். கண்கள், நரம்பு, ஒற்றைத் தலைவலி வரலாம். கணபதி வழிபாடு, களிப்பு சேர்க்கும்.

சிம்மம்

"பொறுமையும் பொறுப்பு உணர்வும் அவசியமான காலகட்டம், அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். அலுவலகக் கோப்புகளை பத்திரமாகக் கையாளுங்கள். இல்லத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அது நிலைத்திட, மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்கள். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். குடும்ப ரகசியங்களை பொது இடத்தில் பகிர வேண்டாம். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் சோம்பலைத் தவிருங்கள். அரசியல், அரசு சார்ந்தோர், புறம்பேசுவோரை விலக்குவதுடன், வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்பு வரும். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். சுளுக்கு, அலர்ஜி, அல்சர் உபாதைகள் வரலாம். இஷ்டமகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

கன்னி

சிந்தனையைச் சிதறவிடாமல் இருக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் தனிப்பட்ட பொறுப்புகளில் நேரடி கவனமும் நிதானமும் அவசியம். மூன்றாம் நபருக்கு ஆலோசனை சொல்ல மூக்கை நுழைக்க வேண்டாம். குடும்பத்தில் சீரான அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். வாரிசுகள் வாழ்க்கையில் சுபத்தடைகள் நீங்கும். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளைத் தள்ளிவையுங்கள், அரசு, அரசியல் துறையினர் நிதானமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வரும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். அடிவயிறு, நரம்பு, பல் உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.

விருச்சிகம்

திட்டமிட்டுச் செயல்பட்டால், தித்திக்கும் காலகட்டம். பணி மிடத்துப் பொறுப்புகளில் திட்டமிடலும் நேரம்தவறாமையும் முக்கியம். வேண்டாத தயக்கத்தை உடனே உதறுங்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாரிசுகள் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள். விலகி இருந்த உறவுகள் வந்து சேரும். வீண் ஜம்பம் தவிருங்கள். செய்யும் தொழிலில் நிதானம் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் முயற்சிகளில் முடங்காமல் இருங்கள். வாகனப் பழுதை உடன் சீரமையுங்கள். அடிவயிறு, பாதம், தூக்கமின்மை உபாதைகள் வரலாம். சண்முகன் வழிபாடு, சந்தோஷம் தரும்.

துலாம்

அமைதியாகச் செயல்படவேண்டிய கு காலகட்டம். அலுவலகத்தில் வீண் ரோஷமும் வெட்டி கோபமும் கூடாது. பணிகளில் முழுகவனம் செலுத்துங்கள். இல்லத்தில் இனிமை உருவாகும். அது தொடர, விட்டுக்கொடுத்தல் அவசியம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். அக்கம் பக்கத்து நட்புகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம். செய்யும் தொழிலில் உரிய தஸ்தாவேஜுகளை பத்திரமாக வையுங்கள். அரசு, அரசியலில் வீண்பழி வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் நிதானம் முக்கியம். தொற்றுநோய்கள், நரம்பு, சைனஸ் உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு, சிறப்புகள் சேர்க்கும்.

தனுசு

முயற்சிகள் முழுமையாகப் பலனளிக்கும் காலகட்டம். பணி யிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். பூர்வீகச் சொத்து சேரும். இரவல் நகை இடைஞ்சல் தரலாம், தருவதும் பெறுவதும் தவிருங்கள். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள், பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள். கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பயணத்தில் வேகம் வேண்டாம். கால்கள், மூட்டு, வயிறு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.

மகரம்

பொறுப்புடன் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். கையெழுத்திடுகையில் கவனச் சிதறல் கூடாது. குடும்பத்தில் குதூகல சூழல் உருவாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். நாவடக்கம் இருந்தால், அவை நீடிக்கும். பூமியால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் முதலீட்டை திட்டமிட்டுச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களை அறவே தவிருங்கள். கலைஞர்களுக்கு முயற்சிகள் பலன் தரும். பயணத்தில் ஓய்வை முறைப்படுத்துங்கள். அலர்ஜி, படபடப்பு, தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மை சேர்க்கும்.

கும்பம்

உழைப்புக்கு ஏற்ப நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். பணி மிடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் ஈடேறும். எதிர்பார்த்த ஏற்றங்கள் கைகூடும். சிலருக்குப் பதவி மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் பெருமைகளும் சேரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் புதிய ஒப்பந்தங்களை நேரடியாக கவனியுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு வாக்கில் கவனம் தேவை. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். முதுகு, அடிவயிறு, மூட்டுகள் உபாதை வரலாம். முருகனைக் கும்பிடுங்கள். முன்னேற்றம் தொடரும்.

மீனம்

திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. புதிய நபர்களை நம்பி ரகசியம் பகிர வேண்டாம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியரிடையே மனக்கசப்புகள் நீங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வீண் கேளிக்கை, வேண்டாத ஆடம்பரம் தவிருங்கள். செய்யும் தொழிலில் நேர்மையும் நேரடி கவனமும் அவசியம். அரசு, அரசியல் துறையினர் எதிர்பாலரிடம் கவனமாகப் பழகுங்கள். கலை, படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம், ஒற்றைத் தலைவலி, வயிறு, தொண்டை உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow