அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி: எடப்பாடி வெளியிட்ட சீக்ரெட்

அமைச்சர் கே.என்.நேரு அவரது மகன் அருண் ஆகியோர் இடையே கமிஷன் கூட்டணி அமைத்து இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி: எடப்பாடி வெளியிட்ட சீக்ரெட்
எடப்பாடி வெளியிட்ட சீக்ரெட்

இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அஇஅதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 03.12.2025 அன்று அமலாக்கத்துறை தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல்,

"டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!

"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?. செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!

நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ.1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்! இன்னும் இரண்டே மாதங்கள் தான்... அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா கோப்புகளும் திறக்கப்படும் ! முகத்திரைகள் கிழிக்கப்படும் ! இது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow