மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளை: 4 பேர் அதிரடியாக கைது
சென்னை ஏழுகிணறு பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.01.2026) ஏழுகிணறு, பெத்து தெரு,ரங்கப்பிள்ளை கார்டன் தெரு சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஜானம் ஜெயின் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் ஜானம் ஜெயின் அளித்த தகவலின் பேரில் மேற்படி வழக்கில் தொடர்புடைய ஏழுகிணறுவைச் சேர்ந்த டோமா சோப்பால், புளியந்தோப்பைச் சேர்ந்த நிர்மல் நாராயணன், சூளையைச் சேர்ந்த கல்லா குமார் நாத் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 3 கிராம் OG கஞ்சா, 9 கிராம் கஞ்சா, பணம் ரூ.3,900 6 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜானம் ஜெயின் கலெக்ஷன் ஏஜென்ட் வேலை செய்து வருவதும், டோமா சோப்பால் கேட்டரிங் வேலை செய்து வருவதும், நிர்மல் நாராயணன் மற்றும் கல்லா குமார் நாத் ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (13.01.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
What's Your Reaction?

