நடிகை சமந்தா விவாகரத்துக் குறித்து அவதூறு - மன்னிப்புக் கோரிய அமைச்சர் 

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் இடையிலான திருமண வாழ்வு விவாகாரத்து ஆனதற்கு தெலங்கான அமைச்சர் கேடி.ராமராவ் தான் காரணம் என்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் கொண்டா சுரேகா அதற்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார். 

Oct 3, 2024 - 13:42
நடிகை சமந்தா விவாகரத்துக் குறித்து அவதூறு - மன்னிப்புக் கோரிய அமைச்சர் 
konda surekha

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் ஆகி அது விவாகரத்தில் முடிந்ததது அனைவரும் அறிந்ததுதான். நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாவை மறுமணம் செய்து கொண்டுள்ளார். சமந்தா இப்போது திரைப்படங்கள் அதிமும்முரமாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, “பல பெண்கள் அமைச்சர் கே.டி.ராமாராவின் அராஜகத்தால்தான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். போதைப்பொருள்களை உபயோகிக்கும் கே.டி.ஆர். பல பார்டிகளை நடத்துகிறார். அந்த பார்டிகளில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கும் விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்று பேசியிருக்கிறார். 

இவரது பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும்  இவரது பேச்சுக்கு தங்களது கண்டனத்தினைப் பதிவு செய்திருக்கின்றனர். 

 “உங்களது அரசியல் சண்டையில் எனது பெயரைச் சேர்க்காதீர்கள். நான் எப்போதும் அரசியலற்றவள்.” என்று சமந்தாவும், தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” என்று நாக சைதன்யாவும் தங்களத் கண்டனத்தில் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து அமைச்சர் கொண்டா சுரேகா அவரது பேச்சுக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ சமந்தா, எனது கருத்துகள் ஒரு தலைவர், பெண்களை இழிவுப்படுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களைக் காயப்படுத்துவதற்காகச் சொன்னது அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதத்தைப் பார்க்கையில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள். எனது கருத்துகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ மனம் புண்பட்டிருந்தால் அந்த கருத்துகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுக் பெறுகிறேன். அரசியல் கண்ணோட்டத்திலோ அல்லது வேறுவிதமாகவோ இதைப் பெரிதாக்க வேண்டாம்.” என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் “எனது பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது இல்லை. நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை. நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow