இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமியை கவுதம் கம்பீர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்: பயிற்சியாளர் பக்ரூத்தீன்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை போட்டிகளில் தேர்வு செய்யாமல் கவுதம் கம்பீர் வேண்டும் என்றே புறக்கணிப்பதாக பயிற்சியாளர் பக்ரூத்தீன் குற்றம்சாட்டி உள்ளார்.
முகமது ஷமி இந்திய அணியின் நட்சத்திய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தவர். பல முக்கிய போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்த இவர், தற்போது வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார். 2023 உலகக் கோப்பையில் இந்தியா உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்த இவருக்கு அத்தொடரில் காயம் ஏற்பட்டது.
அதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி, அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஷமியின் நீண்ட கால பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் கூறுகையில்: ஷமி எந்த வடிவத்திலும் கொண்டு வர முடியாத படிக்கு கவுதம் கம்பீர் மற்றும் நடப்பு பிசிசிஐ அதிகார மட்டங்களின் கொள்கைகள் கிரிக்கெட்டைத் தாண்டியது. ஹர்ஷித் ராணாவை அவரது திறமைக்கு மீறி உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
எந்த வடிவத்திலும் ஷமியும் சர்பராஸ் கானும் இடம்பெறவில்லை என்றால் அதற்கு நிச்சயம் கிரிக்கெட் காரணங்கள் இருக்கவே முடியாது என்பதுதான் உறுதியாகிறது. ஷமியின் நீண்ட கால பயிற்சியாளர் சித்திக்கியும் “ஷமியை அவர்கள் மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது”.
“இது நிச்சயம் ஷமிக்குக் கஷ்டமாகவே இருக்கும், எனக்குமே கஷ்டமாகத்தான் இருக்கிறது. நன்றாக பந்து வீசி உடல் தகுதியை பரமாரித்து வந்தாலும் அவரை அணியில் எடுக்க மறுக்கின்றனர்.இப்போது கூட 20 ஓவர்களுக்கும் மேல் வீசி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எனவே ஷமி உடல்தகுதி பிரச்சனையில்லை.
மேலும் முகமது ஷமியை விட சிறந்த பவுலர் இப்போது இந்திய அணியில் இல்லை. உள்நாட்டுத் தொடர்களில் தோல்வி மேல் தோல்வி அடைந்தும் ஷமியை தேர்ந்தெடுக்க மறுக்கின்றனர். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்திடம் டெஸ்ட் தொடர்களை இழந்தும் ஷமியின் அவசியம் அவர்களுக்குப் புரியவில்லை.
தொடர்ந்து சிறப்பாக ஆடு என்று நான் அவரிடம் கூறி வருகிறேன். எத்தனை காலம் அவரைப் புறக்கணிக்க முடியும்?” என தனது வேதனை பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் பகிர்ந்துள்ளார்.
What's Your Reaction?

