டார்க் சாக்லேட்: சுவை கலந்த ஆரோக்கியத்தின் ரகசியம்!

குறைந்த சர்க்கரை கொண்ட டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியம், மூளைச் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது; இருப்பினும், நெஞ்செரிச்சலைத் தவிர்க்க மிதமான அளவில் உட்கொள்வது உடலுக்கு நலம் பயக்கும்.

டார்க் சாக்லேட்: சுவை கலந்த ஆரோக்கியத்தின் ரகசியம்!
Dark Chocolate

டார்க் சாக்லேட் என்பது பால் சாக்லேட் அல்லது வெள்ளை சாக்லேட் விட குறைந்த சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளது.  டார்க் சாக்லேட்டில் 50% முதல் 90% வரை கோகோ திடப்பொருள்கள் உள்ளன. ஒரு அவுன்ஸ் டார்க் சாக்லேட்டில் நான்குகிராம் நார்ச்சத்து உள்ளன. மேலும் இவற்றில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செம்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் நன்மைகள்...
இதயத்தைப் பாதுகாக்கும்

டார்க் சாக்லேட் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக ஃப்ளேவனால் நிறைந்த கோகோ திடப்பொருள்கள் உள்ளன. இவை நைட்ரிக் ஆக்ஸைடு   உற்பத்தியுடன் தொடர்புடையவை. இது இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் டார்க் சாக்லேட் உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. 

மூளைக்கு நன்மை செய்யும்

டார்க் சாக்லேட் ஃப்ளவனால்கள் நைட்ரிக் ஆக்ஸைடு காரணமாக மூளைக்கு அதிக இரத்த ஓட்டம் இருப்பதால் இது அறிவாற்றலுக்கு நல்லது.  இதில் உள்ள காஃபின் குறுகிய கால அளவு மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்  அடிக்கடி டார்க் சாக்லேட் சாப்பிட்டால் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

சர்க்கரை நோயை நிர்வகிக்க செய்யும்

டார்க் சாக்லேட் சர்க்கரை அளவு மாறுபடலாம். பால் சாக்லேட்டை விட இதில் குறைவுதான். சரியான அளவு எடுத்துகொண்டால் இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்யும்.

சருமத்தை பொலிவாக்கும்

டார்க் சாக்லேட்டில் காணப்படும் ஃப்ளவனால்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சூரிய ஒளியால் உண்டாகும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.

மனநிலையை மேம்படுத்தும்

டார்க் சாக்லேட் சாப்பிட்ட பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தால் அதற்கு காரணம் டார்க் சாக்லேட் தான். பாலிபினால்கள் கார்டிசோலையும் குறைக்கிறது. 

டார்க் சாக்லேட் ஆபத்தானதா?

டார்க் சாக்லேட் கசப்பான சுவையுடன் அதிக காஃபின் கொண்டுள்ளதால் அதிக அளவு  காஃபின் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை அதிகரிக்கக்கூடும். தினம் ஒரு துண்டு டார்க் சாக்லேட் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow