டிச 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 15-ம் தேதி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 20-ம் தேதி சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தாக்கம் கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் மழை வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்:15-ந் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
20-ந்தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும்.இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.
இது சமீபத்தில் கடந்து சென்ற 'டிட்வா' புயலை போல நல்ல மழையை கொடுக்கக் கூடிய புயல் சின்னமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

