தமிழ்நாட்டில் தட்டி எடுக்கப்போகும் மழை.. ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்.. உஷார் மக்களே!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26 வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 12 முதல் 20 செ,மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ,மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்துக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலநிலை மாற்றத்தால் ரெட் அலர்ட் என்பது வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் ரெட் அலர்ட்டுக்கு பதில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 24, 25, 26ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26 வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.அதே நேரத்தில் கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?