பெங்களூரு கனமழையில் இடிந்த கட்டிடம் - கட்டுமானத் தொழிலாளர்கள் ஒருவர் பலி..மீட்பு பணி தீவிரம்
பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து கர்நாடகாவின் பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் கடல் போல் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில், மஞ்சுநாதர் நகர், மேக்ரி சர்கிள், சிவாஜி நகர், நெலமங்கலம், மடிவாலம், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஹென்னூர் அருகே பாபுசப்பல்யாவில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் அப்போது பணியில் இருந்த கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 10 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?