நகை வாங்க சரியான நேரம் வந்துவிட்டது மக்களே... தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம்!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை
நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை சற்று உயரத் தொடங்கியது. குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், நேற்று (நவ. 11) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?