தங்கம், வெள்ளி விலை சரசரவென சரிவு...நகை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாகக் குறைந்து, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Nov 13, 2026 - 10:04
தங்கம், வெள்ளி விலை சரசரவென சரிவு...நகை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி!
today gold rate

தங்கம் விலை

நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்தது. குறிப்பாக, தீபாவளிப் பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், கடந்த நவம்பர் 11-ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று (நவம்பர் 12) ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.12,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது.

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிரடியாகக் குறைந்துள்ளது.

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.195-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow