BIG BOSS 10 : Evict -ஆன லட்சுமி பிரியா ! இன்ஸ்டா ஸ்டோரியால் கிளம்பிய புது சர்ச்சை !
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பெரும் அதிர்ச்சியாய் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது "Instagram Story" பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மகாநதி" தொடரின் மூலம் "காவேரி" கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லட்சுமி பிரியா, தற்போது "பிக் பாஸ் தமிழ் சீசன் 10" நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்தார். தனது கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்வது, டாஸ்க்குகளில் ஆர்வமாக பங்கேற்பது என நிகழ்ச்சியில் கவனம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி பிரியா அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்தை தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
லீடர்ஸ் எக்சிட் லிஸ்ட் மூலம் வெளியேற்றம் :
இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறையான "LEADERS EXIT LIST" மூலம் லட்சுமி பிரியா எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அந்த வாரத்தின் தலைவராக இருக்கும் போட்டியாளர், டாஸ்க்கில் குறைவான பங்களிப்பு அளித்ததாக கருதும் போட்டியாளர்களை எக்சிட் லிஸ்டில் சேர்க்கலாம். அதன் பின்னர், வீட்டில் உள்ள போட்டியாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.
இந்த நடைமுறையில் கடந்த வாரம் ஜாவீத் வெளியேறிய நிலையில், தற்போது லட்சுமி பிரியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய லட்சுமி பிரியா பதிவு :
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், லட்சுமி பிரியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், சில விஷயங்கள் நியாயமற்ற விதத்தில் நடந்ததாகவும், தன்னை லீடர் எக்சிட் போர்டில் சேர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டில் என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சும் காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம். ஆனா, எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்தோம்" என்ற கருத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், போட்டியாளர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்ற வகையிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள விவாதம் :
லட்சுமி பிரியாவின் இந்த பதிவு வெளியானதை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
சில ரசிகர்கள், அவரது விளையாட்டு மற்றும் பங்களிப்பை குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவரது வெளியேற்றம் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு லட்சுமி பிரியா பகிர்ந்த இந்த பதிவு, தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 10 ரசிகர்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
What's Your Reaction?