தீபாவளிக்கு முந்தைய நாளே தங்கம் விலை ஷாக்...சவரனுக்கு மீண்டும் உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

Nov 7, 2026 - 11:25
தீபாவளிக்கு முந்தைய நாளே தங்கம் விலை ஷாக்...சவரனுக்கு மீண்டும் உயர்வு!
today gold rate

கடந்த மாதம் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, சவரன் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், கடந்த 2-ஆம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன்படி, கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் அதிகரித்திருந்தது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் (நவ.,-05) ஒரு கிராம் தங்கம் ரூ.13,385-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (நவ.,-06) திடீரென விலை குறைந்து, கிராமுக்கு ரூ.245-ம், சவரனுக்கு ரூ.1,960-ம் சரிந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.13,140-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,120-க்கும் விற்பனையானது.

தீபாவளிக்கு முன் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

இன்று தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,160-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாற்றமில்லாத வெள்ளி விலை!

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow