என்னை பற்றி தெரிந்தால் இப்படி பேச மாட்டீங்க... கார்த்தி எனக்கு அண்ணன்... அரவிந்த் சாமி நெகிழ்ச்சி!

என்னைப் போல மாப்பிள்ளை வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். என்னைப் பற்றி தெரிந்தால் அவர்கள் அப்படியெல்லாம் சொல்லமாட்டார்கள் என நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

Sep 15, 2024 - 18:37
என்னை பற்றி தெரிந்தால் இப்படி பேச மாட்டீங்க... கார்த்தி எனக்கு அண்ணன்... அரவிந்த் சாமி நெகிழ்ச்சி!
கார்த்தி எனக்கு அண்ணன்... அரவிந்த் சாமி நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் சார்மிங்கான ஹீரோவாக 90ஸ் களில் வலம் வந்தவர் அரவிந்த் சாமி. அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பெண்ணைக் கேட்டாலும் எனக்கு அரவிந்த் சாமி மாதிரிதான் ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இன்றளவும் இளம் பெண்களை வசீகரித்து வருகிறார் அரவிந்த் சாமி. மணிரத்னத்தின் தளபதி படத்தில் தொடங்கி ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்து பல ஹிட்களை கொடுத்த அவர், திடீரெனா சினிமா உலகை விட்டே காணாமல் போயிருந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்தின் இயக்கத்திலேயே வெறித்தனமான கம்பேக் கொடுத்தார். இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

கம்பேக் என்றால் சாதாரண கம்பேக் அல்ல.  'தனி ஒருவன்', 'போகன்', 'செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களின் மூலம் வில்லனிசத்தை அடுத்த லெவலுக்கு அரவிந்த் சாமி எடுத்துச் சென்றுள்ளார் என்றே கூறலாம். வில்லனாக நடித்தாலும் கூட இளம் பெண்களின் இதயங்களைக் கொள்ளைக் கொள்ளும் வில்லனாகவே இருந்து வருகிறார். 

இந்நிலையில் 96 படத்தின் இயக்குநரான பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கிறார் அரவிந்த் சாமி. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெகுளியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தியும், மிடுக்கான சிட்டி பாயாக அரவிந்த் சாமியும் கலக்கியுள்ளனர். இந்த மாதம் (செப்டம்பர்) 27ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் நேற்று (செப். 14) மெய்யழகன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அரவிந்த் சாமி, “ரொம்ப அழகான இந்தக் கதையில் நடிக்கவும், அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றிகள். இந்தக் கதையைப் படித்ததும் இது என் வாழ்வில் நடந்த கதை என்று நினைத்தேன். என் வாழ்வில் நடந்த, இன்னும் என்னை பாதித்துக் கொண்டிருக்கும் கதை இது. படம் வெளியானப் பிறகு இதைப் பற்றி நான் விரிவாகப் பேசுகிறேன். 

இந்தப் படத்தில் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். கார்த்தியும் நானும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம் என்று நம்புகிறேன். கார்த்தி எனக்கு உடன் பிறக்காத அண்ணன் மாதிரி. அந்த அளவிற்கு நாங்கள் இந்தப் படத்தின் மூலம் பழகியிருக்கிறோம். இந்தப் படம் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் படமாக இருக்கும். என்னைப் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், என்னைப் போல மாப்பிள்ளை வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். என்னைப் பற்றி தெரிந்தால் அவர்கள் அப்படியெல்லாம் சொல்லமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow