தனுஷின் அரசியல் Entry ... ஆதரவு கரம் நீட்டிய ஜி.வி.பிரகாஷ்!

தனுஷ் கூடிய விரைவில் அரசியல் களத்தில் இறங்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் தனுஷ் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு என் நண்பனுக்கு தான் என்று பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Aug 18, 2026 - 20:02
தனுஷின் அரசியல் Entry ... ஆதரவு கரம் நீட்டிய ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமீபகாலமாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி  வருகின்றன. தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து வருவது, ரசிகர்களை நலத்திட்டப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் அவரது அரசியல் ஆர்வம் குறித்த யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

குறிப்பாக, தனுஷ் ரசிகர் மன்றத்துக்கான கொடி அறிமுகம், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் அவரது அரசியல் பயணம் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், தனுஷின் அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, தனுஷின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக எனது சப்போர்ட் என் நண்பனுக்கு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

தனுஷும், ஜி.வி.பிரகாஷும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருகின்றனர். தனுஷின் திரைப்படப் பயணத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், தனுஷின் அரசியல் வருகை குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வரும் சூழலில், அவரது நெருங்கிய நண்பரான ஜி.வி.பிரகாஷ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பேசுபொருளாகியுள்ளது. எனினும், தனுஷ் தரப்பில் இருந்து அரசியல் பிரவேசம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

 நெருங்கிய நண்பருமான ஜீ.வி. பிரகாஷ் ஆதரவு கரம் நீட்டிய நிலையில் தற்போது உண்மையாகவே தனுஷ் அரசியலுக்கு வர உள்ளாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow