தனுஷின் அடுத்த அதிரடி! கட்சி பெயர் பதிவு ? அரசியல் ENTRY CONFIRM - ஆ ?

விஜயைத் தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? புதிய கட்சிக்கு பெயரை முடிவு செய்து பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

Oct 7, 2026 - 08:14
தனுஷின் அடுத்த அதிரடி! கட்சி பெயர் பதிவு ? அரசியல் ENTRY CONFIRM - ஆ ?
Dhanush Party Registration ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் அடுத்த நகர்வு அரசியலை நோக்கியதா? ரசிகர் மன்ற செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள் என தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், புதிய அரசியல் கட்சி தொடர்பான தகவல் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அடுத்தடுத்த உச்ச நடிகர்களின் அரசியல் வருகை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

தனுஷின் அரசியல் திட்டம் ?

நடிகர் தனுஷ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இயங்கி வந்தாலும், அவரது ரசிகர் மன்ற நடவடிக்கைகளில் சமீப காலமாக அரசியல் சாயல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரசிகர்களை ஒருங்கிணைப்பது மட்டுமின்றி, அவர்களின் மூலம் சமூக நலப்பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாக தனுஷ் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

'தமிழக எழுச்சிக் கழகம்'?

இந்த சூழலில், நடிகர் தனுஷ் "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், உரிய நேரத்தில் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த தகவல் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர் மன்றத்திலிருந்து அரசியல் இயக்கமா ?

தனுஷின் ரசிகர் மன்றங்கள் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அவரது பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷ் ரசிகர்களிடம் பேசிய விதமும் கவனம் பெற்றது. ரசிகர்கள் வெறுமனே தன்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வதைத் தாண்டி, தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், சமூக நலப்பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் பேச்சு, தனுஷின் எதிர்கால அரசியல் பயணத்துக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியது.

'தலைவர்' தனுஷ்… ரசிகர்களின் போஸ்டரும் கவனம்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வெளியிட்ட சில போஸ்டர்களிலும் வழக்கமான 'நடிகர் தனுஷ்' என்ற அடையாளத்தைக் கடந்து 'தலைவர் தனுஷ்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

அதன்பின்னர் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர் மன்ற நடவடிக்கைகள் ஆகியவை இணைந்து பார்க்கப்பட்டபோது, தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

விஜய்க்குப் பிறகு அடுத்த நடிகர் யார்?

தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜயின் அரசியல் பயணம், திரையுலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் எதிர்கால அரசியல் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதத்தை அதிகரித்துள்ளது.

ரசிகர் மன்றம் → மக்கள் இயக்கம் → அரசியல் கட்சி என்ற பாதையில் விஜய் மேற்கொண்ட பயணம், சினிமா ரசிகர் அமைப்புகளை அரசியல் அமைப்புகளாக மாற்றுவதற்கான ஒரு புதிய மாதிரியை உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் தனுஷின் அரசியல் கட்சி தொடர்பான தகவல் வெளியாகியிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

தனுஷின் அடுத்த நகர்வு என்ன?

தனுஷ் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

கட்சிப் பெயர் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மாறுமா? அடுத்த சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனுஷ் அரசியல் களத்தில் இறங்குவாரா? என்பதற்கான பதில் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளில்தான் தெரியவரும்.

அதே நேரத்தில், தனுஷைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்களா என்ற கேள்வியும் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களின் அடுத்தடுத்த நகர்வுகள் கவனிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் திரையுலகத்தின் தாக்கம் இன்னும் எந்த அளவுக்கு அதிகரிக்கப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow