இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும் ? வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Oct 7, 2026 - 07:00
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும் ? வானிலை மையம் தகவல் !
Tamil Nadu Rain Alert Today !

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று வானிலை மாற்றம் காணப்படலாம். குறிப்பாக தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கும், பலத்த காற்றுக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று மழை நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று (07-10-2026) ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் வானிலை மாற்றம் ஏற்படக்கூடும்.

மேலும் விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

இன்று மேற்கண்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையின்போது பலத்த காற்றும் வீசக்கூடும். மணிக்கு சுமார் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு

காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை மாற்றத்திற்கு என்ன காரணம்?

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

அதேபோல் வட தமிழ்நாட்டின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்திலும் மற்றொரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. மேலும் மன்னார் வளைகுடாவில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரையிலான பகுதிகளில், தமிழ்நாடு மற்றும் உள் கர்நாடகா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது.

வெப்பநிலை எப்படி இருக்கும் ?

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் "இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை" பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow