விடிந்ததும் வாசலில் நின்ற போலீசார்...அடுத்தடுத்து சிக்கும் திமுக புள்ளிகள்...மாஜிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Nov 20, 2026 - 09:18
விடிந்ததும் வாசலில் நின்ற போலீசார்...அடுத்தடுத்து சிக்கும் திமுக புள்ளிகள்...மாஜிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
DMK Moorthy

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளில், அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கல் குவாரி டெண்டர் தொடர்பான ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன்படி பாலமேடு பகுதியில் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், பூவந்தி பகுதியில் ராஜாமணி ஆகியோரின் வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்குவாரி முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையால் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow