தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? நகைப்பிரியர்களுக்கு கவனத்திற்கு!

கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நகை வாங்க காத்திருக்கும் பெண்களுக்கு இன்று வந்துள்ள மாற்றம் என்ன? கடந்த நாட்களுடன் ஒப்பிட்டால் விலை எங்கே நிற்கிறது?

Aug 26, 2026 - 11:26
தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? நகைப்பிரியர்களுக்கு கவனத்திற்கு!
Gold & Silver Price Today in Chennai

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 26) விலையில் மாற்றமின்றி நிலையாக உள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை நிலவரங்கள்:

ஆகஸ்ட் 25-ம் தேதியும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனையானது. அதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையானது. அதாவது, ஆகஸ்ட் 24-ம் தேதியுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு கிராமுக்கு ரூ.20-ம், ஒரு சவரனுக்கு ரூ.160-ம் குறைந்த நிலையில் விலை தொடர்கிறது.

கடந்த சில நாட்களின் விலையைப் பார்த்தால், ஆகஸ்ட் 20-ம் தேதி ஒரு சவரன் ரூ.1,16,800 ஆக இருந்தது. ஆகஸ்ட் 21-ம் தேதி ரூ.1,18,800 ஆகவும், ஆகஸ்ட் 22-ம் தேதி ரூ.1,19,600 ஆகவும் உயர்ந்தது. ஆகஸ்ட் 24-ம் தேதி ரூ.1,20,240 என்ற அளவை எட்டிய நிலையில், தற்போது ரூ.1,20,080 ஆக உள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3,280 அதிகமாக உள்ளது.

இன்று விலையில் மாற்றமின்றி நிலையாக உள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் "ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும்" விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் நிலையாகிறது

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி "ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும்" விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.275 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதி ரூ.265 ஆக குறைந்தது. தற்போது அதே விலையில் தொடர்கிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி ரூ.260 ஆக இருந்த வெள்ளி விலை, தற்போது கிராமுக்கு ரூ.5 அதிகமாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow