புதிய பயணத்தை தொடங்கும் KUMUDAM BIZ NEWS DAILY .... நாளை முதல் வாசகர்களின் கைகளில்!

குமுதம் குழுமத்தின் புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி நாளிதழை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தொடங்கி வைத்து, விழாவில் பேசிய அவர், தெருக்களில் தெரியும் மக்களின் வாழ்வியல்தான் இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் எனக் குறிப்பிட்டார்.

Oct 4, 2026 - 17:33
Oct 4, 2026 - 17:47
புதிய பயணத்தை தொடங்கும் KUMUDAM BIZ NEWS DAILY .... நாளை முதல் வாசகர்களின் கைகளில்!

தெருவில் தான் உண்மையான பொருளாதாரம் தெரியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு, புகழ்பெற்ற குமுதம் குழுமத்தில் இருந்து குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி தினசரி நாளிதழ் தொடக்க விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதனை துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.

இதில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வரதராஜன், செயல் துணைத் தலைவர் திரு. சங்கர் வி. சுப்பிரமணியம், குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி ஆசிரியர் ரங்கநாதன், குமுதம் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் தியாக செம்மல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைப்புலி தாணு, தவெக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், ஐஏஎஸ் அதிகாரிகள் விஜயகுமார், ஏ.கே.விஸ்வநாதன், நடிகர் கருணாஸ், திரை துறையினர், வணிக நிறுவனத்தினர், ஊடகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பேசிய துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி,

இந்திய பொருளாதாரத்தை புரிந்து கொள்ள புத்தகங்களையும், கல்லூரி பாடங்களையும் மட்டும் படித்தால் போதாது; தெருக்களுக்குச் சென்று மக்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும்,” என, துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.

அவர் பேசியதாவது : காந்திய சிந்தனையாளர் தரம்பாலின் வழிகாட்டுதலால், இந்தியாவின் உண்மையான பொருளாதாரத்தை அறிய நாட்டின் பல்வேறு தொழில் மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்ததாக அவர் கூறினார். அரசின் உதவியோ, பெரிய வங்கிகளின் கடனோ இல்லாமல், சமூக நம்பிக்கை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் பல தொழில் மையங்கள் வளர்ந்துள்ளன.

திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், குஜராத் மாநிலம் மோர்பியில் ஆங்கிலம் தெரியாத பலரும் வீடுகளிலேயே தொழில் செய்து, உலக சந்தைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக தெரிவித்தார், இந்தியாவிலேயே தனி்நபர் வருமானம் அதிகமாக உள்ளது இங்கு தான் என்றார். இயற்கை பேரிடர்கள், நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை சந்தித்த பின்னரும் அப்பகுதிகளின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து வருவதாக கூறினார்.

திருப்பூரில் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி பெறாதவர்களாக இருந்தாலும், குறிப்பாக 12 வகுப்பை தாண்டாதவர்கள் தான். உலக சந்தையுடன் தொடர்பு கொள்ளும் திறனை உருவாக்கியுள்ளனர். கரூரில் வணிகர்கள் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது என்றார்.

மேற்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் குடும்ப அமைப்பு, பெண்களின் பங்களிப்பு, சமூக நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“பொருளாதாரம் என்பது பங்குச்சந்தை மட்டும் அல்ல. நாட்டின் உண்மையான பொருளாதாரத்தை புரிந்து கொள்ள பத்திரிகையாளர்களுக்கும் புதிய பார்வை தேவை. குறிப்பாக, பொதுமக்களுக்கு புரியும் வகையில் பொருளாதார செய்திகளை வழங்க வேண்டும்,” என்றார்.

இந்தியர்களின் பொருளாதாரú பழக்கத்தில் நிலம், தங்கம் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் இருப்பதையும், அதன்பிறகே பங்குச்சந்தை போன்ற முதலீடுகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow