மின்சார உதடுகள்-காதல் போயின்.....

மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மின்சார உதடுகள்-காதல் போயின்.....
மாலைமதி

16.காதல் போயின்...
அன்றைக்குத் தேதி 23.8.2025. அப்போது ஹாவர்டு யுனிவர்ஸிட்டி கேம்பிரிட்ஜ் கேம்பஸில் இரண்டு பேர் நடந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள்.
சனிக்கிழமை, மாலை அழகாக இருந்தது.
"இதே அல்மாண்டா பூக்களை நான் மெரினா பீச்சிலும் பார்த்திருக்கிறேன் தெரியுமா?"
சாலையோர மலர்களை ரசித்தவாறே, சில்வியா நடந்தாள்.

அவளும் மஹிமாவும் நடந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள். மஹிமா சொல்கிறாள்... “சில்வி, நேற்று என்ன நடந்தது தெரியுமா... அந்த எகனாமிக்ஸ் டொனால்டு இருக்கானே, எனக்கொரு கிஸ் கொடுன்னு கேட்டுட்டான்ப்பா..."
"நம்மளோட ட்ரான்ஸ் டைம்லைன் போர்ட்டபிள் ஷிப் இருக்கில்ல, அது முதல் தடவையா சைல்ட்ஹுட் டொனால்டை நேற்று நம்ம லேபுக்கு அழைத்து வந்தது!"
“அதான், ஒரு பார்ட்டி தரேன் என்று சொல்லியிருந்தேன். நீகூட வந்திருந்தியே! அவனும்தான் வந்தானே, பார்த்தியே!” நினைவூட்டினாள் மஹிமா.
“டைம் வேஸ்ட் பண்ணாதடி இப்படி சப்ப மேட்டர்ல..." சீரியஸானாள் சில்வியா,
“உனக்கு சப்ப மேட்டர்... எனக்கு சூப்பர் மேட்டர். நான் எல்லார்கிட்டயும் கேட்ட மாதிரி அவன்ட்ட மெனு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?"
மஹிமா சொல்லச் சொல்ல, சில்வியா மனதில் கீழ்க்கண்ட எண்ணம் ஓடியது.

"நாளைக்கு மேக்ஸ்வெல் சாரிடம் சொல்லி ஒரு செஷன் மஹிமாவுக்கு மின்சார உதடுகளை மாட்டி, அந்த டொனால்டின் அசட்டு மெமரிகளை க்ளீன் செய்துவிட்டு, அமெரிக்காவின் புகழ்பெற்ற சைக்காலஜிஸ்ட் எலிசபெத் லோப்டஸ் சொல்கிற ஃபால்ஸ் மெமரியை டவுன்லோடு செய்து, டொனால்டை ஒரு கோமாளியாக ட்ரீட் செய்ய வைத்துவிட வேண்டும்!”
மஹிமா தொடர்ந்தாள்... “டெலிபதி மூலமாக எனக்குக் கேட்குதுடீ. அவன் ஏற்கனவே கோமாளிதான். என்னை நேச்சுரலாவே விட்டுவிடடீ... 'காதல் போயின் சாதல்' பாரதி... சரிதானே?"

போஹன்வில்லா செடிகளைத் தாண்டி நடந்தார்கள்.
சில்வியா நினைத்ததை உணர்ந்து பாரதியைத் துணைக்கு அழைத்தாள் மஹிமா,
"அது சரிதான். எல்லாரும் சலீம் மாதிரி பெர்வெர்ட்டா இருக்க மாட்டாங்கதான். அவன் மெனுல என்ன கேட்டான்... சொல்லித் தொலை, கேட்காட் கேட்டானா, திருமூலர், வள்ளலார் மாதிரி"
அந்தச் சந்தர்ப்பத்தில் சலீமின் குற்றச் செயல்களை டொனால்டின் அசட்டுக் காதலோடு ஒப்பிட்டுப் பேசினாள் சில்வியா. அதற்குச் சிரித்துக்கொண்டே டொனால்ட் அடித்த ஜோக்கைக் கொஞ்சம் தாழ்ந்த குரலில், போதுமான அளவு வெட்கமும் சேர்த்து அக்கம்பக்கத்தில் யாருக்கும் கேட்காமல், சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் விபரீதம் பற்றியும் தெரியாமல், மஹிமா சன்னமான குரலில் சொன்னாள்.
"கிஸ் ஒண்ணு கம்பல்சரி... மிச்ச மெனு நீ டிசைட் பண்ணிக்கோ! இப்படி சொல்லிட்டான்டீ! என் அத்தை பையன்கூட என்னை இப்படி வெட்கப்பட வெச்சதில்லை!"
அந்த ஜோக்கை நினைத்துச் சிலிர்த்த வண்ணம், லேப் கோட்டை எடுத்தாள் மஹிமா.
"ஷ்ஷ்ஷ்...” என்று ஒரு சத்தம் கேட்டது.

மஹிமா 'ஹெக்' என்று மறுபடி சத்தம் எழுப்பினாள்.
அவளுடைய மூக்கிலிருந்து ரத்தக் கோடுகள் வந்தன. சில்வியா அதிர்ந்தாள்.
"மஹீ... என்னாச்சுடீ?!!” என்று வேகமாகச் சென்று அவளைத் தாங்கிப் பிடித்தாள்.
"காதல் போயின்..”
சில நிமிடங்கள் முன்பு சொல்லிக்கொண்டிருந்த மஹிமா, தன் உயிர்த் தோழியின் மடியில் 'சாதலை'ச் செய்துகொண்டிருந்தாள்.
அவளைச் சுற்றி ஒரு கூட்டம் கூடத் தொடங்கி இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow