தலைவர் ரசிகர்களுக்கு ட்ரீட்...வெளியானது அதிரடி பர்ஸ்ட் சிங்கிள்!
ரஜினிகாந்த்-நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர்-2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் நெல்சன், இந்த முறை படத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் இடம்பெற்ற மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் கேமியோ கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திலும் இருவரும் முக்கியமான கேமியோவில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி, சந்தானம், யோகி பாபு, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
‘அல்ல போலேலோ’... வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரிலீஸுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
What's Your Reaction?