16 வயது குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை. பிரிட்டன் அரசு அறிவிப்பு.
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை முழுமையாக தடை செய்வதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிகாரபூர்வ அறிவிப்பு
சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றது இந்த சமூக ஊடகமும் தொலைப்பேசியும். இதனால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பார்வைக் குறைபாடு, மூளைப் பாதிப்பு, நினைவாற்றல் குறைவு, போன்ற குறைபாடுகள் ஏற்படுவதால் அதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பிரிட்டன் அரசு ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யாரும் சமூக ஊடகங்களை அணுகுவதற்குத் தடை விதிக்கவும் கேமிங் மற்றும் நேரலை ஒளிபரப்பு சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதரடி உத்தரவைப் போட்டுள்ளார். தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் சமூகவலைதளத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும். முழுமையான தடை விதிப்பதே சரியான தேர்வு என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகின்றன என்று பிரிட்டன் பிரதமர் கூறுகின்றார்.
எந்தெந்த தளங்கள் என்று இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரிட்டன் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா ,பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த பட்டியலில் பிரிட்டன் இணைந்துள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க், தாய்லாந்து மற்றும் கென் கொரியா ஆகிய நாடுகள் இதே போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகின்றது.
What's Your Reaction?