புத்தாண்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் உறைபனி தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

புத்தாண்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
Moderate rain likely in New Year

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைகளில் வட வானிலையே நிலவும். மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

உறைபனி நீடிக்கும் 

நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. டிச. 29 முதல் ஜன. 1 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 28-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை

டிச. 27-இல் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திகுறிப்பில் அறிவுறுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow