தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை... சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jul 10, 2026 - 15:29
தமிழகத்தில்  இடி மின்னலுடன் மழை... சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. தெலங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் வரையும் சுமார் 1.5 கி.மீ முதல் 3.1 கி.மீ உயரத்தில் வரை நிலவுகிறது. நீலகிரி  மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர்  மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

அதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகின்ற 12.07.2026 முதல் 14.07.2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளனர். வெப்பநிலை பொறுத்த வரையில் இன்றும் நாளையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. 

அதே போல் 12.07.2026 முதல் 14.07.2026 வரையும்  அதிகபட்ச வெப்பநிலையில் வாய்ப்பு குறைவு.தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். இன்றும் நாளையும் (11.07.2026) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒருசில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow