கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Oct 14, 2024 - 13:44
கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவசர கடிதம் எழுதியுள்ளார். 

அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பர்களுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்படுள்ளது. 

அதன்படி, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அக்டோபர் 16 முதல் 18ம் தேதி வரை ஐடி நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow