இன்றைய நாள் எப்படி இருக்கு?... மேஷம் முதல் மீனம் வரை முழு ராசிபலன் இதோ!
இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது? 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு ஏற்ற நாளாக இருக்காது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படலாம். குறிப்பாக தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் தலைதூக்கி பின்னர் விலகும். வீண் செலவுகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவசியமான தேவைகளுக்குக்கூட கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி, உறவில் நெருக்கம் அதிகரிக்கும். அதேசமயம் உறவினர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்திலும் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன் விற்பனையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டுவந்த இடையூறுகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த கடன் தொடர்பான பிரச்னைகளும் சுமுகமாக முடிவுக்கு வரும். வியாபாரத்தில் விறுவிறுப்பு அதிகரிப்பதுடன் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும் தன்னம்பிக்கையும் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அதேசமயம் பிள்ளைகள் தொடர்பான சில காரியங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்கள் மூலமாக பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படலாம். இருப்பினும் சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் விலகும். உறவினர்கள் மூலம் பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். சிலருக்கு ஆன்மிகம் மற்றும் தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன் பணியாளர்களின் ஒத்துழைப்பும் சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதேசமயம் சகோதரர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் கிடைக்கலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து, உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகவே இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மேற்கொள்ளும் காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். இருப்பினும் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாகச் செயல்படக்கூடும் என்பதால் அவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்கள் மூலமாக கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சகோதரர்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியம் சாதகமாக முடியும். இருப்பினும் சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் தொடர்பாக எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில காரியங்கள் முடிவடைவதில் சிறிய தாமதம் ஏற்படலாம். இருப்பினும் மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை தொடர்பாக எதிர்பார்த்த தகவல் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் சில பிரச்னைகள் உருவாகலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவார்கள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியும் குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அவை மகிழ்ச்சிக்காகவே அமையும். சகோதரர்களிடம் பேசும்போது இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். அதன் மூலம் எதிர்பார்த்ததைவிட கூடுதல் ஆதாயமும் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். சகோதரர்கள் தொடர்பான காரியங்கள் முடிவடைவதில் சில தாமதங்கள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சூழல் அமையும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாளாக இருக்கும். அதேசமயம் சகோதரர்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியாக இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் விறுவிறுப்பு அதிகரிப்பதுடன் லாபமும் கூடும்.
What's Your Reaction?