ரிஷப ராசிக்கான தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்: கடன் வாங்கும் சூழல் வரலாமா?
ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப்புத்தாண்டு பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டான விஸ்வாவசு வருடம் ஜோதிடக் கணக்குகளின்படி 13.4.2025 அன்று நள்ளிரவு 2.58 மணிக்குப் பிறக்கிறது. அதேசமயம் 14.4.2025 அன்றே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த சமயத்தில் அமையக்கூடிய கிரஹ நிலைகள் மற்றும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் நிகழவிருக்கும் ராகு, கேது மற்றும் குரு, சனி பெயர்ச்சிகளின் அடிப்படையில் ரிஷபம் ராசியினருக்கான பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
ரிஷப ராசியினருக்கான தமிழ் புத்தாண்டு பலன் விவரங்கள் பின்வருமாறு-
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக் கூடிய ஆண்டு. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப பெருமை கிட்டும். பணிகள் எதையும் திட்டமிட்டுச் செய்தால், பாராட்டுகளும் அதனால் ஆதாயமும் பெறலாம். மேலதிகாரிகளிடம் பேசும் போது வீண் உணர்ச்சிவசப்படல் வேண்டாம்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கையை இழந்து தவித்த சிலருக்கு மறுவாழ்வு அமையும் சந்தர்ப்பம் வரும். சகோதர உறவுகளிடம் சச்சரவு வேண்டாம். ஆபரணங்களை இரவல் தருவது, பெறுவதைத் தவிருங்கள். சிலருக்கு சுபகாரியங்களுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். தேவையற்ற முதலீடுகளைத் தவிருங்கள். கூட்டுத் தொழிலில் கவனமாக இருங்கள். மாணவர்கள் சோம்பல் தவிர்த்தால் ஏற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். உயர்கல்விக்கான முயற்சிகளை நேரடியாகச் செய்யுங்கள். அரசு, அரசியல் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். சொல்லும் வாக்கிற்கு செல்வாக்கு உயரும். கலை, படைப்புத் துறையினர் புதிய அறிமுகங்களை நம்பி படைப்பு ரகசியங்களைச் சொல்ல வேண்டாம்.
பயணங்களில் வேகம் கூடவே கூடாது. ரத்தத் தொற்று நோய்கள், கழிவு உறுப்பு, முக உறுப்புகள், ரத்த நாள உபாதைகள் வரலாம். ஸ்ரீரங்கம் பெருந்தேவி தாயாரை தினமும் மனதாரக் கும்பிடுங்கள். மகிழ்ச்சி நிறையும்
Read more: மேஷ ராசிக்கான தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்: தேடி வரும் பதவியும்.. ஊதிய உயர்வும்
What's Your Reaction?






